காரியாபட்டி,
நரிக்குடி ஒன்றியம் அ.முக்குளம் அருகே உள்ள உண்டுறுமி கிடாக்குளம் பகுதியில் மருத்துவக்கழிவுகளை எரியூட்டும் ஆலை உள்ளது. இந்த ஆலையால் அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு வருவதாக கூறி இந்த மருத்துவ கழிவு ஆலையை மூடக்கோரி பா.ஜ.க.வினர் காரியாபட்டி பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு காரியாபட்டி ஒன்றிய தலைவர் ராஜபாண்டி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பாண்டுரங்கன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட துணைத்தலைவர் ராமஜெயம், மாவட்ட பொது செயலாளர் ராஜா, மாவட்ட செயலாளர் ஆறுமுகம், திருச்சுழி தொகுதி பொறுப்பாளர் விஜய ரகுநாதன், மாவட்ட கூட்டுறவு பிரிவு பாலமுருகன், ஆன்மிகம் பிரிவு மாவட்ட செயலாளர் ராமலிங்கம், மாவட்ட இலக்கிய பிரிவு துணைத்தலைவர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.