வேளாண்மை துறை அமைச்சு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தர்மபுரியில் வேளாண்மை துறை அமைச்சு பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2023-04-03 20:03 GMT

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த வேளாண்மை துறை அமைச்சு பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சு பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் ரேகா தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஜெயவேல், மாவட்ட பொருளாளர் அண்ணாதுரை, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பழனியம்மாள், மாவட்ட செயலாளர் சேகர், நிர்வாகிகள் இளவேனில், புகழேந்தி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். வேளாண்மை துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணியின் போது இறந்த ஊழியரின் குடும்பத்திற்கு கூடுதல் நிவாரணத்தொகை வழங்க வேண்டும். பணியில் இருக்கும் போது இறந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். வேளாண்மை துறை அமைச்சு பணியாளர்களின் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் வேளாண்மை துறை அமைச்சு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்