பா.ஜனதா பட்டியல் அணி ஆர்ப்பாட்டம்

ஓமலூரில் பா.ஜனதா பட்டியல் அணி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-02 19:56 GMT

ஓமலூர்

ஓமலூர் பஸ் நிலையம் அம்பேத்கர் சிலை அருகில் சேலம் கோட்ட பா.ஜனதா பட்டியல் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பட்டியல் அணி மாநில தலைவர் மீதான தாக்குதலை கண்டித்தும், தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் மகிலன், பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர் தலித் பாண்டியன், மாநில செயலாளர் சாட்சாதிபதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் சேலம் மாநகர் மாவட்ட பட்டியல் அணி தலைவர் புகழேந்தி, மாவட்ட பொதுச் செயலாளர் முனுசாமி, கண்ணன், மாவட்ட செயலாளர் தாமஸ் பாபு, மாவட்ட பொருளாளர் நடராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்