நெசவாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அனைத்து கைத்தறி நெசவாளர் தொழிற்சங்கங்களின் போராட்டக்குழு சார்பில் பரமக்குடி தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
பரமக்குடி,
பரமக்குடி-எமனேசுவரம் அனைத்து கைத்தறி நெசவாளர் தொழிற்சங்கங்களின் போராட்டக்குழு சார்பில் பரமக்குடி தாசில்தார் அலுவலகம் முன்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு போராட்டக்குழு கன்வினர் கோவிந்தன் தலைமை தாங்கினார். குப்புசாமி முன்னிலை வகித்தார். ஓய்வூதியம் நிறுத்தி வைத்துள்ள அனைத்து நெசவாளர்களுக்கும் மற்ற தொழிலாளர்களுக்கும் தமிழக அரசு உடனடியாக ஓய்வூதியத்தை வழங்க வேண்டும். கைத்தறியில் உற்பத்தியாகும் ஜவுளிகளுக்கு ஜி.எஸ்.டி. வரி முழுமையாக நீக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் ராஜன், பெருமாள், ராமமூர்த்தி, சுப்பிரமணியன், ஐ.என்.டி.யு.சி. சார்பில் கண்ணன், ராமச்சந்திரன், ரமேஷ், சி.ஐ.டி.யு. சார்பில் மோதிலால், முரளி, பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் காசி விசுவநாதன், மோகன்ராம், ராம்தாஸ் உள்பட பலர் பேசினர். இதில்ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.