காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஓசூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-11 18:45 GMT

ஓசூர்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து ஓசூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓசூர்- தேன்கனிக்கோட்டை சாலையில், ரெயில் நிலையம் அருகேயுள்ள பாரத வங்கி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார். ஓசூர் மாநகர தலைவர் தியாகராஜன், மாவட்ட பொருளாளர் மகாதேவன், நிர்வாகிகள் சண்முகசுந்தரம், சீனிவாச ரெட்டி, சிவப்ப ரெட்டி கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும், பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை குறைக்க வலியுறுத்தியும், மத்திய அரசை கணடித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதில் நிர்வாகி கீர்த்தி கணேஷ், ஐ.என்.டி.யு.சி. நிர்வாகிகள் காளிமுத்து, ராஜி, நாராயணன், வெள்ளைச்சாமி, மாவட்ட மகளிரணி தலைவி சரோஜா மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்