காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-03-10 18:45 GMT

எலச்சிபாளையம்

திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சர்வேயர் செல்வகுமார் தலைமை தாங்கினார். மோடி அரசு பொதுத்துறை நிறுவனங்களான எஸ்.பி.ஐ., எல்.ஐ.சி. பங்குகளை அதானிக்கு விற்ற வகையில் அதன் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிப்படைய கூடிய சூழல் உருவாகியுள்ளது. இதனை கண்டித்து பல்வேறு முழக்கங்களை காங்கிரஸ் கட்சியினர் எழுப்பினர். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் சர்வேயர் செல்வகுமார் கூறும்போது, ஹிடன்பெர்க் ஆய்வறிக்கையின் படி அதானி தனது பங்கு விலையை உயர்த்தி காட்டி மோசடி செய்ததன் விளைவு பொதுத்துறை நிறுவனங்களான எஸ்.பி.ஐ., எல்.ஐ.சி. பங்குகள் வீழ்ச்சி அடைந்துள்ளன. சுமார் ரூ.10 லட்சம் கோடி அளவுக்கு பங்கு சந்தை விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்