கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருச்சுழி,
திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் திருச்சுழி, அருப்புக்கோட்டை, சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு வருவாய் வட்டங்களை சேர்ந்த சுமார் 65-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். திருச்சுழி தாசில்தாரின் ஊழியர் விரோதம் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தின்போது பேசினர்.