மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பள்ளிபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-02-25 18:45 GMT

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், தமிழக கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பள்ளிபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ரவி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி தொடர்ந்து தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும், எதிரான கருத்துக்களை பேசி வருகிறார். சமீபத்தில் கூட மார்க்சிய தத்துவவாதிகள் மற்றும் தலைவர்கள் குறித்து உண்மைக்கு மாறான பேச்சுகளை பொதுவெளியில் பேசி வருகிறார். அவருடைய செயல்பாடுகள் மிகவும் கண்டிக்கத்தக்கது என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் மத்திய அரசு கவர்ணர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நாமக்கல் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்