ஆர்ப்பாட்டம்
தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் மார்ச் மாதம் முதல் கேபிள் டி.வி. மாதாந்திர கட்டணம் உயர்த்தப்படுவதற்கு ஆட்சேபனை தெரிவித்து தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சங்க விருதுநகர் மாவட்ட கிளையினர் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கருப்பையா, பொருளாளர் ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.