ஆர்ப்பாட்டம்
பாவூர்சத்திரத்தில் யூனியன் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
பாவூர்சத்திரம்:
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பாவூர்சத்திரத்தில் யூனியன் அலுவலகம் முன்பு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் தங்கம் தலைமை தாங்கினார். முருகன், ஜெகநாதன், சுமன், இசக்கி முத்து, ஜோதி, உலகம்மாள், நாகராஜன், பாண்டியராஜன், மூக்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் குணசீலன், சி.ஐ.டி.யு. பீடி சங்க இணை செயலாளர் ஆரிய முல்லை, கற்பகவல்லி, அய்யாசாமி, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் சொர்ணம் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கீழப்பாவூர் பஞ்சாயத்து யூனியன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாரியப்பனிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.