ரெயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ரெயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-02-17 22:31 GMT

சூரமங்கலம்:

சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் முன்பு எஸ்.ஆர்.இ.எஸ். தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில் கோட்ட தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். செயலாளர் பாண்டியன் முன்னிலை வகித்தார். துணை பொதுச்செயலாளர் ராஜாராம் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தின் போது புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், இடம் மாறுதல் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளவர்களுக்கு உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும், குறிப்பாகடிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு இடமாற்ற உத்தரவை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் எஸ்.ஆர்.இ.எஸ். தொழிற்சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்