மருத்துவ பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

மருத்துவ பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-02-17 18:45 GMT

மருத்துவத்துறையில் தற்காலிக கணக்கு தலைப்பில் உள்ள ஊழியர்களுக்கு மாதந்தோறும் உரிய தேதியில் ஊதியம் வழங்க வலியுறுத்தி, அரசு மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்க மாவட்டதலைவர் பரமசிவன் தலைமை தாங்கினார். மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராமசந்திரன் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் நீதிராஜா கோரிக்கைகளை விளக்கி பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச்செயலாளர் ராம்தாஸ், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்க மாநில பொருளாளர் தமிழ், தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர் மேம்பாட்டு சங்க மாநில இணை செயலாளர் சுஜாதா, அரசு அனைத்து மருந்தாளுனர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன், புறநகர் மாவட்ட செயலாளர் தமிழ்செல்வி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அரசு அனைத்து மருந்தாளுனர் சங்க மாநிலச்செயலாளர் ஆனந்தவள்ளி சிறப்புரை ஆற்றினார். மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பெரோஸ்கான் நன்றி கூறினார். இதில் மருத்துவத்துறையில் பணி புரியும் ஊழியர்களும், பல்வேறு சங்கங்களை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்