ஆர்ப்பாட்டம்
அங்கன்வாடி ஊழியர் சங்க கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் நகராட்சி அலுவலகம் முன்பு சத்துணவு அங்கன்வாடி ஊழியர் சங்க கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சத்துணவு சங்க தலைவர் ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிட்டு சத்துணவு அமைப்பாளர்களிடம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.