ராஜபாளையம்,
ராஜபாளையத்தில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு கடந்த மாத ஊதியத்தை வழங்காததை கண்டித்து வட்டார கல்வி அலுவலகம் முன்பு வட்டார தலைவர் புஷ்பலதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜவகர் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் சரவணன் முருகன், மாவட்ட பொருளாளர் உதயகுமார், மாவட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் மாரியப்பன், வத்திராயிருப்பு வட்டார செயலாளர் ரத்தினம், வெம்பக்கோட்டை வட்டார செயலாளர் முத்துராமலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார பொருளாளர் ராஜேஷ் நன்றி கூறினார்.