சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை அகற்றக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை அகற்றக்கோரி திருப்புவனத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-02-01 18:45 GMT

திருப்புவனம்

அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை அகற்றக்கோரி திருப்புவனத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

சாலைகளில் மாடுகள்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றித் திரியும் கோவில் மாடுகளால் அடிக்கடி சாலை விபத்துகள் நடக்கின்றன. இது குறித்து மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பல கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்புவனம் சந்தை திடல் பகுதியில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் அய்யம்பாண்டி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் மோகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் தண்டியப்பன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் கண்ணகி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மாவட்ட துணை செயலாளர் சுடர்மணி, நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் பாசறை பிரிவு மாவட்ட செயலாளர் கார்த்திக்ராஜா, தமிழ்புலிகள் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ்முருகன் உள்பட பலர் பேசினர்.

முடிவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் முத்துராஜா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்