ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-01-11 18:49 GMT


தமிழ்நாடு அரசு எஸ்.சி. எஸ்.டி. அலுவலர் நலச்சங்கம் மற்றும் அரசு ஊழியர் ஐக்கிய பேரவை சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேரவையின் மாவட்ட தலைவர் ஜெயராம் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சந்திரகுமாரவேல் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மாநில அமைப்பு செயலாளர் கருப்பழகு, மாநில பொருளாளர் கலைச்செல்வம், துணை செயலாளர் கண்ணன், அரசு ஊழியர் ஐக்கிய பேரவை மாநிலத்தலைவர் மலைச்சாமி, எஸ்.சி. எஸ்.டி. அரசு ஊழியர் கூட்டமைப்பின் மாநில தலைவர் கருப்பையா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். முடிவில் மாவட்ட பொருளாளர் சுரேஷ் நன்றி கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்