ஆர்ப்பாட்டம்

ஊராட்சி துறை அனைத்து கிளையின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-12-20 19:55 GMT


விருதுநகர் கருவூல அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து கிளையின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சட்ட தலைவர் சிவஞானம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பேசினர். கோரிக்கைகளை விளக்கி சங்க நிர்வாகிகள் பேசினர். மாநில பொருளாளர் மகாலிங்கம் நிறைவு உரையாற்றினார். ஓய்வு நாள் அன்று தற்காலிக பணிநீக்கம் செய்வதை கைவிட வேண்டும். 3 மாதங்களுக்கு ஒரு முறை ஓய்வூதிய குறைதீர் கூட்டத்தை நடத்த வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு தனி ஊதியத்தையும் சேர்த்து ஓய்வூதிய பலன்களுக்கு கணக்கிடும் வகையில் திருத்திய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. முன்னதாக மாவட்ட துணைத் தலைவர் துரைராஜ் வரவேற்றார். முடிவில் மாவட்ட பொருளாளர் பவுண்டு ராஜ் நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்