ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-12-18 19:40 GMT

அருப்புக்கோட்டை, 

அனைவருக்கும் கல்வி உரிமைச்சட்டத்தின்படி 1 முதல் 8 வகுப்புகள் வரை இலவச கல்வி வழங்கப்படுவதால் சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை மத்திய அரசு நிறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கல்வி உதவித் தொகை நிறுத்தியதை கண்டித்து அருப்புக்கோட்டை புதிய பஸ் நிலையம் எதிரே தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கல்வி உதவித் தொகையை நிறுத்திய மத்திய அரசை கண்டித்தும், மீண்டும் கல்வி உதவித் தொகை வழங்க கோரியும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டத்தலைவர் தஸ்கீர் அகமது தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் நூர்முகமது, மாநிலச்செயலாளர் தாமஸ் சேவியர், த.மு.மு.க. மாவட்ட தலைவர் மதார்கான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் காத்தமுத்து மற்றும் சிறுபான்மை நல குழுவை சேர்ந்த நாகராஜன், சலீம் சிக்கந்தர், அன்புச்செல்வன், காஜாமைதீன், நஜிமுதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்