பா.ஜனதாவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ஓசூரில் பா.ஜனதாவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓசூர்
ஐ.நா.சபையில் பிரதமர் மோடியை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலால் பூட்டோ அவதூறாக பேசியதாக கண்டனம் தெரிவித்து பா.ஜனதா கட்சி சார்பில் ஓசூர் ராம் நகர் அண்ணா சிலையருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை தாங்கி பேசினார். இதில், மாநில தொழில்துறை பிரிவு செயலாளர் கே.ராமலிங்கம், மாவட்ட துணைத்தலைவர் முருகன், மாவட்ட செயலாளர்கள் பிரவீன்குமார், ஜே.பி.பாபு, பி.எல்.மனோகர், அன்பரசன், மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் கிஷோர், மாவட்ட பொருளாளர் சீனிவாசன் மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, கட்சியினர் பிலால் பூட்டோவின் உருவப்படத்தை கால்களால் மிதித்தும், கொடும்பாவியை தீயிட்டு கொளுத்தியும்கண்டன கோஷங்களை எழுப்பினர்.