மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அரசம்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-12-12 18:45 GMT

மத்தூர்

போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டியில் ஆதிதிராவிடர் காலனிக்கு ஒதுக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தில் தனியாருக்கு பட்டா வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்ட செயலாளர் சாமு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நஞ்சுண்டன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகாலிங்கம், ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் இளவரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் விளையாட்டு மைதானம் ஆக்கிரமிப்பை கண்டித்தும், தனியாருக்கு பட்டா வழங்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அரசு வேலையில் உள்ளவர்களுக்கும் இலவச வீட்டுமனை வேறு நபரின் பெயரில் வழங்கியதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்