ஆர்ப்பாட்டம்
அருப்புக்கோட்டையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டையில் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு அருப்புக்கோட்டையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு பாபர் மசூதி இடிப்பை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் மதார்கான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேற்கு மாவட்ட தலைவர் பஷீர் அகமது, மாநில பொருளாளர் ஷபியுல்லா கான் மற்றும் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.