பழங்குடி மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ராயக்கோட்டையில் பழங்குடி மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
ராயக்கோட்டை
ராயக்கோட்டை வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சென்றாயன் தலைமை தாங்கினார். பழங்குடி மக்கள் சங்க மாநில தலைவர் கெம்பன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை செயலாளர் சின்னசாமி, மாவட்ட கவுன்சிலர் பழனி ஆகியேர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பழங்குடியின மக்களை வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற கூடாது. பழங்குடி மக்கள் வாசிக்காத இடங்களை சரணாலயமாக அறிவிக்க வேண்டும். பழங்குடி மக்கள் சாகுபடி செய்யும் நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். பழங்குடியினருக்கு தனி ஆணையம், தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட செயலாளர் கணேசன், மாநில குழு உறுப்பினர் தொட்டன், தொட்டதிம்மனஅள்ளி ஊராட்சி தலைவர் கலைச்செல்வி ராஜேந்திரன், ஒன்றிய துணை செயலாளர் கணேஷ், நிர்வாகிகள் கோவிந்தராஜ், வெங்கடேஷ், தனபால், சீனிவாசன், நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.