எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்

எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-10-14 18:45 GMT

தேவகோட்டை, 

மதுரை கோட்ட எல்.ஐ.சி. முகவர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.ஐ.சி. அலுவலகத்தில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேவகோட்டை எல்.ஐ.சி. அலுவலக வளாகத்தில் லியாபி முகவர் சங்க தலைவர் மரிய லூயிஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பாலிசிகளுக்கு போனசை உயர்த்தி கொடுக்க வேண்டும், ஜி.எஸ்.டி.யை முற்றிலும் நீக்க வேண்டும், பணிக்கொடையை உயர்த்தி கொடுக்க வேண்டும், குழு காப்பீட்டை உயர்த்தி கொடுக்க வேண்டும், அனைவருக்கும் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் 40-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர். 

Tags:    

மேலும் செய்திகள்