அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-12 18:45 GMT

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், மின்கட்டண உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து அ.ம.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பு செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட செயலாளர் அறிவழகன், கிழக்கு மாவட்ட செயலாளர் கணேசகுமார், மேற்கு மாவட்ட செயலாளர் மாரேகவுடு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை திரும்பப்பெற வேண்டும். தி.மு.க. ஆட்சியின் மக்கள் விரோத போக்கை கைவிட வேண்டும். ஜெயலலிதாவின் ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை முடக்குவதை கைவிட வேண்டும். மக்களை மிரட்டும் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கவுன்சிலர்களை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்