ஆர்ப்பாட்டம்
ராஜபாளையத்தில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே உள்ள மேலராஜ குலராமன் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, அ.தி.மு.க., தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சியினர் மற்றும் பெண்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஊராட்சி மன்ற தலைவர் விவேகானந்தன் மீது திட்டமிட்டு புகார் அளித்த வருவாய் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும், ஊராட்சி தலைவர் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.