மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பென்னாகரம் தாலுகா அலுவலகம் முன்பு மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-27 18:45 GMT

பென்னாகரம்:

பென்னாகரம் அருகே தனியார் எலும்பு முறிவு சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த சிகிச்சை மையத்தில் கடந்த ஜூன் மாதம் சின்னபள்ளத்தூரை சேர்ந்த திருப்பதி (வயது 26) என்பவர் காலில் சதை பிடிப்பிற்காக சிகிச்சை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது அந்த வாலிபருக்கு சிகிச்சை மையத்தில் கட்டு போட்டு அனுப்பி உள்ளனர். 4 நாட்களில் திருப்பதியின் கால்கள் அழுகிவிட்டது. உடனடியாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வாலிபரின் கால் அகற்றப்பட்டது. இதுதொடர்பாக போலீசில் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில் அந்த எலும்பு முறிவு சிகிச்சை மையத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி பென்னாகரம் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு வட்ட செயலாளர் சிவா தலைமை தாங்கினார். வக்கீல் மாதையன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி செயலாளர் கருப்பண்ணன், திராவிட விடுதலை கழக நிர்வாகி சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மக்கள் அதிகாரம் மாநில இணை செயலாளர் கோபிநாத் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாசில்தாரை நேரில் சந்தித்து தவறான சிகிச்சை அளித்த எலும்பு முறிவு மையத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு கொடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்