ஆர்ப்பாட்டம்

அம்பேத்கர், பெரியார், மார்க்சிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-09-24 18:45 GMT

கோவில்பட்டி:

அம்பேத்கர், பெரியார், மார்க்சிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கோவில்பட்டியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்க உத்தரவு பிறப்பித்துள்ள சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி வழங்கிய உத்தரவை தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். மனுதர்ம நூலை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் அ.மாணிக்கராஜா தலைமை தாங்கினார். ஆதித்தமிழர் கட்சி வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் காளிமுத்து முன்னிலை வகித்தார். ஜெய்பீம் தொழிலாளர் நலச்சங்க தலைவர் செண்பகராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி (எம்.எல்.) நகர செயலாளர் சங்கரன், தமிழ்ப்புலிகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் பீமாராவ், மாவட்ட செய்தி தொடர்பாளர் கனியமுதன், எட்டயபுரம் நகர செயலாளர் பாலு, சமூக செயற்பாட்டாளர்கள் பால்சிங், முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்