எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்
பாலக்கோட்டில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாலக்கோடு:
பாலக்கோடு எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். செயலாளர் சரவணன், கவுரவ தலைவர் ரமணன், பொருளாளர் பழனிவேல் மற்றும் நிர்வாகி பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது பாலிசிகளுக்கான போனசை அதிகரிக்க வேண்டும். கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும். வெளிநாட்டு பாலிசிகளுக்கு ஏதுவாக சேவை அளிக்க வேண்டும். 5 வருடங்களுக்கு மேற்பட்ட பாலிசிகளை புதுப்பிக்க அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் எல்.ஐ.சி. முகவர்கள் கலந்து கொண்டனர்.