ஆர்ப்பாட்டம்
பா.ம.க. சார்பில் போதை பொருள்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகே பா.ம.க. சார்பில் போதை பொருள்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் மத்திய மாவட்ட பா.ம.க. செயலாளர் டேனியல் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொருளாளர் திலகபாமா கலந்து கொண்டு பேசினார். மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை போதைப் பொருள்களால் பாதிக்கப்படும் நிலை உள்ளதால் போதைப்பொருள் விற்பனையாளர்களை கைது செய்து குண்டர் தடுப்புச்சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர். முடிவில் மத்திய மாவட்ட தொழிற்சங்க செயலாளர் அமிர்தகண்ணன் நன்றி கூறினார்.