ஆன்லைன் ரம்மியை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
ஆன்லைன் ரம்மியை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
காரைக்குடி
ஆன்லைன் ரம்மியை தடை செய்யக் கோரியும், ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனையை ரத்து செய்ய வேண்டியும் மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் காரைக்குடி ஐந்து விளக்கு அருகே இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அமலன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். தலைமை செயற்குழு உறுப்பினர் ராமன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் முத்துமணி, அவைத்தலைவர் அருள்சாமி, செயலாளர் ரமேஷ், காரைக்குடி நகர செயலாளர் ஜெகன், தேவகோட்டை நகரத்தலைவர் பாரி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.