பள்ளி நேரத்திற்கு பஸ் இயக்க வலியுறுத்தி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம்

தொப்பூர் அருகே பள்ளி நேரத்திற்கு பஸ் இயக்க வலியுறுத்தி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-18 17:03 GMT

நல்லம்பள்ளி:

தொப்பூர் ஊராட்சிக்குட்பட்ட சந்திரநல்லூர் கிராமத்திற்கு காலை, மாலை நேரங்களில் போதிய பஸ் வசதி இல்லாததால் மாணவ-மாணவிகள் சிரமத்திற்குள்ளாகினர். இதனிடையே பள்ளி நேரத்திற்கு பஸ் இயக்க வலியுறுத்தி மாணவ-மாணவிகள், பெற்றோர்களுடன் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் விரைந்து சென்று பஸ் இயக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து மாணவ-மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்