தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி:
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் பசுபதி தலைமை தாங்கினார். செயலாளர் வடிவேல் முன்னிலை வகித்தார். பொருளாளர் முருகேசன் வரவேற்று பேசினார். நிர்வாகிகள் துரை, ரஹீம் பீமன் சின்னராசு, சிங்காரம், ஜெயசீலன், காளியப்பன், வீரமணி, பெரியசாமி உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கு 10 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். அகவிலைப்படி, மருத்துவப்படி, காப்பீடு திட்டம் உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி சங்க நிர்வாகிகள் கோஷங்கள் எழுப்பினர்.