ஆர்ப்பாட்டம்

ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தினர் விருதுநகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-14 18:56 GMT

விருதுநகர், 

ஓய்வுபெற்ற அலுவலர் சங்க விருதுநகர் கிளையின் சார்பாக விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் ராமராஜ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியினை ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை செயல்படுத்த வேண்டும். ஊதிய நிலுவைத்தொகை வழங்க வேண்டும். 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கை குறித்து வலியுறுத்தப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்