தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-13 17:11 GMT

தர்மபுரி:

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் ரவீந்திரன் மாவட்ட நிர்வாகிகள் மாரிமுத்து, சிசுபாலன், கிரைஸாமேரி, அர்ஜுனன், சின்னசாமி, மல்லிகா, குப்புசாமி, மல்லையன், ராமச்சந்திரன், மாதையன், தர்மபுரி நகர செயலாளர் ஜோதிபாசு ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் தொப்பூர் அருகே 3 வாலிபர்கள் மீது திட்டமிட்ட தாக்குதல் நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இவர்களில் ஒரு வாலிபரின் கால் துண்டான நிலையில் முட்புதரில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். இதுகுறித்து வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட வாலிபர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கட்சி நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட உதவி கலெக்டர் சாந்தியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்