ஆர்ப்பாட்டம்

சங்கரன்கோவிலில் அகில பாரத அய்யப்ப சேவா சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது

Update: 2022-06-06 14:22 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் தேரடி திடலில் அகில பாரத அய்யப்ப சேவா சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் ஆறுமுகம், சைவ சித்தாந்த சபை சார்பில் சண்முகவேல் ஆவுடையப்பன், விசுவ இந்து பரிஷத் மாவட்ட தலைவர் வன்னியராஜன், பா.ஜ.க. மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், சரவணன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

சங்கரநாராயண சுவாமி கோவிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். பக்தர்களுக்கு இலவச கழிப்பறை வசதி, இலவச தங்கும் விடுதி, குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகள் செய்து தர வேண்டும். ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த  இந்த கோவிலில் ஆயிரமாண்டு விழா மற்றும் கும்பாபிஷேக விழாவை நடத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் பா.ஜ.க. மாவட்ட வர்த்தக அணி தலைவர் ராஜா, நகர தலைவர் கணேசன், இந்து முன்னணி நகர தலைவர் சங்கர், பாதயாத்திரை குழு கனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

-----------

Tags:    

மேலும் செய்திகள்