இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
வேதாரண்யத்தில் இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தலைமை தபால் அலுவலகம் முன்பு இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய தலைவர் பாலகுரு ஒன்றிய செயலாளர் பழனியப்பன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சிவகுரு பாண்டியன். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை செயலாளர் நாராயணன் மற்றும் இளைஞர் பெருமன்றத்தினர் கலந்து கொண்டனர். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் தமிழகத்தில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.