ஆர்ப்பாட்டம்
கும்பகோணத்தில் கிராம தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணத்தில் கிராம தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்க குடந்தை கோட்டத்தலைவர் கனகசபாபதி தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் சாமிநாதன் முன்னிலை வகித்தார். தபால் ஊழியர்களுக்கு 8 மணி நேர வேலை வழங்கி பென்ஷன் உள்ளிட்ட அந்தஸ்து வழங்கவேண்டும். பணியின்போது உயிரிழந்த கிராம தபால் ஊழியர்களின் வாரிசுகளுக்கு எந்தவித நிபந்தனைகளின்றி கருணை அடிப்படையில் வேலை வழங்கவேண்டும். பயிற்சி பட்டறையில் பங்கேற்கும் கிராம தபால் ஊழியர்களுக்கு டி.ஏ. வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.