ஓசூரில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்

ஓசூரில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-10-04 19:45 GMT

ஓசூர்

ஓசூர் அரசு மருத்துவமனையை கண்டித்து, மாநகர பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர தலைவர்கள் மணிகண்டன், ரமேஷ் கண்ணன், கே.நாகேந்திரா, தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேற்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் நாகராஜ் கலந்துகொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஓசூர் அரசு மருத்துவமனையில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்தும் பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் சுகாதார வசதிகளை செய்து கொடுக்க கோரியும், நோயாளிகளுக்கு பாரபட்சமின்றி மருத்துவம் பார்க்க வேண்டும் என வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். இதில், கட்சியின் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், மாநில தொழில்துறை பிரிவு செயலாளர் கே.ராமலிங்கம், வர்த்தக பிரிவு மாநில துணைத்தலைவர் சுதா நாகராஜன், மாநில நிர்வாகி கஸ்தூரி, மாவட்ட நிர்வாகிகள் விஜயகுமார், சீனிவாசன், முருகன், பிரவீன் குமார், பாபு, சகுந்தலா மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்