மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்

பரமத்தியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-10-04 18:45 GMT

பரமத்திவேலூர்

பரமத்தியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை எதிர்த்து நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பரமத்திவேலூர் தாலுகா செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். வட்டக் குழு உறுப்பினர் செல்வராணி வரவேற்றார். மாவட்ட செயலாளர் கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்கமணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள விஸ்வகர்ம யோஜனா திட்டத்தை கண்டித்தும், குலக்கல்வி திட்டம் உள்ளிட்ட மக்களை பாதிக்கும் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு நடை முறைப்படுத்துவதை கண்டித்தும், அவற்றை திரும்ப பெற வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை கண்டித்தும், அவற்றை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட்ட குழு உறுப்பினர்கள் குணசேகரன், பழனி, கருப்பையா உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்