ஆதித்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் ஆதித்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-09-29 18:45 GMT

நாமக்கல்லில் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை கண்டித்து ஆதித்தமிழர் கட்சியினர் சார்பில் நேற்று ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கு போலீசார் அனுமதி மறுத்து இருந்தனர். மேலும் நாமக்கல் ரெயில் நிலையத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதனிடைய கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் ராவணன் தலைமையில் ரெயில் நிலையம் முன்பு திரண்ட ஆதித்தமிழர் கட்சியினர், மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட தலைவர் அக்பர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்