சேலத்தில் சாலையை சீரமைக்க கோரிமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சேலத்தில் சாலையை சீரமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-09-26 20:52 GMT

சேலம்

சேலம் அம்மாபேட்டை முதல் பட்டைகோவில் வரை பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.. இதனால் சாலை கடந்த 6 மாதத்துக்கு மேலாக குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் இந்த சாலையை சீரமைக்க கோரி நேற்று அம்மாபேட்டை காந்தி மைதானம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர குழு உறுப்பினர் தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். இதில் சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என்று கோஷமிடப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மாநகர கிழக்கு குழு உறுப்பினர்கள் சுல்தான், பச்சமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்