பாலக்கோடு தாலுகா அலுவலகம் முன்புவிவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2023-09-20 19:30 GMT

பாலக்கோடு:

பாலக்கோடு தாலுகா அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் பாண்டியம்மாள் தலைமை தாங்கினார்.

இதில் மாவட்ட செயலாளர் முத்து, மாவட்ட தலைவர் கோவிந்தசாமி, ஒன்றிய செயலாளர் ராஜா மற்றும் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாலக்கோடு ஜக்கசமுத்திரம், பிக்கனஅள்ளி, ஜிட்டாண்டஅள்ளி ஊராட்சிகளில் உள்ள விவசாய தொழிலாளர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவேண்டும். வன நில சாகுபடி நிலங்களுக்கு பட்டா வழங்கவேண்டும்.

மகளிர் உரிமைத்தொகை

தேசிய ஊரக வேலை திட்ட தொழிலாளர்களுக்கு கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை ஏழை மக்கள் அனைவருக்கும் ரூ.1,000 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்