குறைந்தபட்சம் ரூ.7,850 வழங்கக்கோரி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

குறைந்தபட்சம் ரூ.7,850 வழங்கக்கோரி ஓய்வூதியர்கள் மேட்டூர், சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-08-12 21:46 GMT

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்கக்கோரி சேலம் நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சூரமங்கலம் கிளை தலைவர் சம்பத் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மோகனசுந்தரம், சக்கரவர்த்தி, சந்திரசேகரன், பாஸ்கர் உள்பட ஏராளமான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.இதேகோரிக்கையை வலியுறுத்தி மேட்டூரிலும் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேட்டூர் தாலுகா அலுவலகம் முன்பு அனைத்து ஓய்வூதியர்கள் சங்க வட்டத்தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

இதேகோரிக்கையை வலியுறுத்தி மேட்டூரிலும் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேட்டூர் தாலுகா அலுவலகம் முன்பு அனைத்து ஓய்வூதியர்கள் சங்க வட்டத்தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. 

மேலும் செய்திகள்