ஆர்ப்பாட்டம்

அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்றது.

Update: 2023-08-12 19:51 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட கிளைத்தலைவர் பிலாவடியான் தலைமை தாங்கினார். கருப்பையா, புஷ்பம், சிவயோகம், ராம சீனிவாசன், காளீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் பாலகிருஷ்ணன் பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கருப்பையா ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் பூங்கொடி, ஊரக வளர்ச்சி ஊராட்சித்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்ரீனிவாசன், சி.ஐ.டி.யு. நகர கன்வீனர், வீர சதானந்தம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பணி ஓய்வு பெற்ற தொகுப்பூதிய ஊழியர்கள் அனைவருக்கும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முடிவில் மாவட்ட துணைத் தலைவர் சரஸ்வதி நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்