மணிப்பூர் சம்பவத்தை கண்டித்துஇந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2023-08-02 20:38 GMT

சேலம்

மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும், அங்கு சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு வழங்காத அந்த மாநில பா.ஜனதா அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டியும் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று இந்திய குடியரசு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் கருப்புசாமி தலைமை தாங்கினார். மாநில தலைவர் கருமலை, மாநில துணை செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட அவைத்தலைவர் மாணிக்கம், மாவட்ட செயலாளர் பூபதி, பொருளாளர் குப்பன், மாவட்ட துணை செயலாளர் குமார், மகளிர் அணி பொறுப்பாளர் ஜெயசுதா, சேலம் மாநகர தலைவர் மாரியப்பன், மாநகர செயலாளர் சேட்டு, மாவட்ட இளைஞரணி தலைவர் ரூபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் மணிப்பூரில் நடந்த வன்முறை சம்பவத்தை கண்டித்தும், அங்கு பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும், மணிப்பூரில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்காத பா.ஜனதா அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்