தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்புஓ.பன்னீர்செல்வம் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்அ.ம.மு.க. வினரும் கலந்து கொண்டனர்

Update: 2023-08-01 19:30 GMT

தர்மபுரி:

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி தர்மபுரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் கே.எம். குமார் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் ஜி.அரங்கநாதன் முன்னிலை வகித்தார். இளைஞர் அணி மாவட்ட செயலாளர் நேதாஜி வரவேற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.ம.மு.க. மாவட்டச் செயலாளர் டி.கே. ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.ஆர். முருகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினார்கள். கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை தாமதப்படுத்தக் கூடாது. இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், வழக்கை தாமதப்படுத்தும் தமிழக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தின் போது கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் அ.ம.மு.க. நிர்வாகிகள் பாலு, முத்துசாமி, ஏகநாதன், ஓ.பன்னீர்செல்வம் அணியின் மகளிர் அணி மாவட்ட செயலாளர் காவேரி உள்ளிட்ட 2 கட்சிகளின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்