மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் சேலம் மாவட்டம் சார்பில் கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சாதிக்பாட்ஷா தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் தாஜூதீன் முன்னிலை வகித்தார். மணிப்பூரில் இளம்பெண்ண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் வன் கொடுமையை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் மத்திய அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி இருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட பொருளாளர் அஸ்லம் கான், மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழக மாநில தலைவர் இப்ராகீம் பாதுஷா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொருளாளர் காஜா மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.