ஊத்தங்கரை
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஊத்தங்கரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மகளிர் விடுதலை இயக்க மாநில துணை செயலாளர் ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணை செயலாளர் அசோகன், நகர செயலாளர் கோவேந்தன், மாநில வழக்கறிஞர் பிரிவு பாலச்சந்தர், தொகுதி செயலாளர் சங்கத்தமிழ் சரவணன், தொகுதி துணை செயலாளர் பிரபாகரன், திராவிடர் கழக நிர்வாகி பழ.பிரபு, தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி சுரேஷ்குமார், விமல்குமார், அறிவழகன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சேகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் மகாலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்தாத அந்த மாநில அரசையும், மத்திய பா.ஜ.க. அரசையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.