ஆர்ப்பாட்டம்
பழனியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மாதர் சங்கம் மற்றும் மாணவர் சங்கம் சார்பில் பழனி குளத்து ரவுண்டானா பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வாலிபர் சங்க நகர செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். பொருளாளர் மாரிக்கண்ணு, மாதர் சங்க நகர செயலாளர் ராக்கம்மாள், மாணவர் சங்க நகர செயலாளர் தீபக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு நடந்த பாலியல் வன்முறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் சங்கம், மாதர் சங்கம், மாணவர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.