ஆர்ப்பாட்டம்

உடல் உழைப்பு தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-07-25 20:13 GMT


விருதுநகர் தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு உடல் உழைப்பு தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர். சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் மகாலட்சுமி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் தேவா நிறைவுரையாற்றினார். தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற அனைத்து தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். முதலாம் வகுப்பு முதல் கல்வி நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்